Wednesday, April 23, 2014

நேரமிருக்கிறது
================
நேரங்களை
சேமிக்கப் பழகியிருக்கிறேன்.
திட்டமிட்டு விடுவதால்.

தொலைந்து போவதில்லை
பொழுதுகள்.

நேரமில்லை என்ற
நழுவல்களை
நகர்த்திவிடுகின்றன
நமக்கேயான நேரங்கள்.

தியானிக்க முடிகிறது.
வாசிக்க முடிகிறது.
 அதனால்
பிறரைப் பற்றி
சிந்திக்கமுடிகிறது.

நேரங்கள்
இருப்பது
நமக்குள் தான்.
நேரங்கள் எப்போதும்
இல்லாமல் போவதில்லை. .





Saturday, April 19, 2014





தொல்லியல் துறையில் அம்மா
மார்கழி மகோத்சவங்கள்

மணம் நிறைக்கும் கச்சேரிகள்.
மறப்பதில்லை எப்போதும்,

அம்மாவின் தள்ளாமை...
நாமும் போகமுடியாமல் போனாலும்
ராகமழைதான் வீட்டில்.


முதிர்ச்சியின் ஆலாபனையுடன்
மழலைக்கு மாறியதால்
மிளிறும் மொழியெலாம்
மோகனம்தான்.

குளறும் வார்த்தைகளுடன்
கொட்டித்தீர்க்கும் அன்புதான்
கல்யாணி.

அந்தக்கால கதைகளை          
ஆசையுடன் ஆரம்பிப்பது
ஆனந்தபைரவிதான்.

நடுங்கும் விரல்களுடன்
நமக்கு திலகமிட்டு
நெகிழும் நேரம்
நன்றாய் கேட்கும் நீலாம்பரி
.
தொண்ணூறு என்பது
வயோதிகமாய் தோன்றவில்லை
தொல்லியல் கச்சேரி ஒன்றை
தொடங்கி இருக்கிறாள்
அம்மா.                           
திருமதி,ரஜினி பெத்துராஜா.


                




Friday, April 18, 2014

யாரோ இல்லை எவரும்.

Tuesday, September 25, 2012

காந்திஜியின் பேத்திஏலாகாந்தியுடன்
===================================
சத்தியாகிரஹ மாநாட்டிற்கு காந்தியின்   பே த்தி   ஏலாகாந்தி அழைத்ததின் பேரில் காந்தியவாதிகள் பலரும்  தென்னாப்பிரிக்கா சென்றிருந்தோம். ஏலாகாந்தியும் மிக மென்மையானவர் தன் தாத்தாவைப்போல் .
..........................................................................

Monday, September 24, 2012

இந்திராக்காவின் வீணைக்கச்சேரி ஆண்டாள்கோயிலில் சிறப்பாக நடந்தது.
========================================================================