நேரமிருக்கிறது
================
நேரங்களை
சேமிக்கப் பழகியிருக்கிறேன்.
திட்டமிட்டு விடுவதால்.
தொலைந்து போவதில்லை
பொழுதுகள்.
நேரமில்லை என்ற
நழுவல்களை
நகர்த்திவிடுகின்றன
நமக்கேயான நேரங்கள்.
தியானிக்க முடிகிறது.
வாசிக்க முடிகிறது.
அதனால்
பிறரைப் பற்றி
சிந்திக்கமுடிகிறது.
நேரங்கள்
இருப்பது
நமக்குள் தான்.
நேரங்கள் எப்போதும்
இல்லாமல் போவதில்லை. .
================
நேரங்களை
சேமிக்கப் பழகியிருக்கிறேன்.
திட்டமிட்டு விடுவதால்.
தொலைந்து போவதில்லை
பொழுதுகள்.
நேரமில்லை என்ற
நழுவல்களை
நகர்த்திவிடுகின்றன
நமக்கேயான நேரங்கள்.
தியானிக்க முடிகிறது.
வாசிக்க முடிகிறது.
அதனால்
பிறரைப் பற்றி
சிந்திக்கமுடிகிறது.
நேரங்கள்
இருப்பது
நமக்குள் தான்.
நேரங்கள் எப்போதும்
இல்லாமல் போவதில்லை. .



