Wednesday, August 22, 2012

 இனிய  நிகழ்வுகளுடன் சுதந்திர தின விழா                        
==============================================
காலை ராஜபாளையம்
 என்.ஏ.ஆர் குருகுலத்தில் குழந்தைகள் கூடியிருக்க, கொடியேற்றினேன்.தேசபக்தி உண்ர்வில் திளைத்தேன்.

மாலை கம்பம் நகர் பாரதிஇலக்கியபேரவையின் பரிசளிப்பு விழா.மறக்கமுடியாத ஊர்வலம்.
கட்டுரைநூல்களில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைக்க, பாரதிமுண்டாசணிந்து
பெற்றுக் கொண்டேன்.
மஞ்சுளா, கம்பம்பாரதன்,முரளி,நிரந்தரா  நினைவில் நின்றார்கள்.
வந்தே மாதரம்

Friday, August 3, 2012

Nilal

                                                       
                                                                நிழல்  

நிழல் என்றும்  நிஜத்தைத் தொடரும். அது நிஜத்தின் சிதறல்தான் .நிஜமற்ற ஒன்றிற்குத்தான் எத்தனை சக்தி. நிஜமான சேவை செய்து  உயர்ந்து விடுகிறது நிழல்.  இத்தனை இதம் நிழலுக்கு உள்ளதென்றால் அது நிஜத்திற்கும் இருக்கவேண்டும்தானே.

இப்ரபஞ்சத்தின் தோற்றம் அனைத்துமே குறைவற்ற நிறைவடிவம்தான்.  மேலாய் பல தூசுகள் படிந்திருக்கலாம்.தூசுஅற்ற நிஜவடிவத்தையே நிழல் தன குணமாக ஏற்றுள்ளது.அதனாலேயே அதற்கு இதம் தரத்தோன்றியுள்ளது.

தூசுகளை  மட்டும் தட்டிவிடத் தெரிந்தால் போதும்,நம் நிஜம் எது என்று உணர்ந்து விடத் தெரிந்தால் போதும். பலருக்கும்   நிழல்ஆகிவிடலாம்.