நிழல்
நிழல் என்றும் நிஜத்தைத் தொடரும். அது நிஜத்தின் சிதறல்தான் .நிஜமற்ற ஒன்றிற்குத்தான் எத்தனை சக்தி. நிஜமான சேவை செய்து உயர்ந்து விடுகிறது நிழல். இத்தனை இதம் நிழலுக்கு உள்ளதென்றால் அது நிஜத்திற்கும் இருக்கவேண்டும்தானே.
இப்ரபஞ்சத்தின் தோற்றம் அனைத்துமே குறைவற்ற நிறைவடிவம்தான். மேலாய் பல தூசுகள் படிந்திருக்கலாம்.தூசுஅற்ற நிஜவடிவத்தையே நிழல் தன குணமாக ஏற்றுள்ளது.அதனாலேயே அதற்கு இதம் தரத்தோன்றியுள்ளது.
தூசுகளை மட்டும் தட்டிவிடத் தெரிந்தால் போதும்,நம் நிஜம் எது என்று உணர்ந்து விடத் தெரிந்தால் போதும். பலருக்கும் நிழல்ஆகிவிடலாம்.

No comments:
Post a Comment